ஏலக்காய் பொடி குறட்டை பிரச்சனையை தீர்க்குமா? என்பதை பற்றி பார்க்கலாம்.
குறட்டையை குறைக்க தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பாக ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் அளவு ஏலக்காய் பொடி சேர்த்து குடிக்கலாம். இது எளிமையான வீட்டு வைத்தியம். இது சுவாச பாதையை திறந்து குறட்டை பிரச்சனையை குறைக்க உதவுகிறது. இதை தொடர்ச்சியாக பின்பற்றினால் குறட்டையிலிருந்து முழுமையான தீர்வு கிடைக்கும்.
இந்த முறையானது இயற்கையான தீர்வு தருவதாக பலரும் அனுபவரீதியிலும் கூறி வருகின்றனர். அதாவது மூக்கில் அடைப்பு ஏதேனும் இருந்தால் அது பெரும்பாலும் குறட்டையை உண்டாக்கும். ஏலக்காய் பொடியை எடுத்துக்கொள்ளும் போது அது மூக்கடைப்பை தளரச் செய்கிறது. தொண்டை உலர்வது, வறட்சி போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் குறட்டை அதிகமாக வரும். அலர்ஜி இருப்பவர்களுக்கும் குறட்டை உண்டாகும். எனவே ஏலக்காய் பொடியை பயன்படுத்துவதால் குறட்டை பிரச்சனை தீர்வதோடு, சுவாச பாதை வீக்கமும் குறையும்.
இது தவிர அதிக எடை உள்ளவர்கள், தொண்டை தசைகள் பலவீனமாக இருப்பவர்கள், மூக்கில் பிரச்சனை உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், வாயால் சுவாசிப்பவர்கள் ஆகியோருக்கு இந்த ஏலக்காய் பொடி குறட்டை பிரச்சனையை தீர்க்காது. இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


