இன்றுள்ள அவசர காலகட்டத்தில் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் வாழும் மக்கள் சிலர் பகல் வேலை, இரவு வேலை என மாறி மாறி பார்க்கும் கட்டாயம் இருக்கிறது. ஒரு குடும்பத்தின் ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். இப்படி இருக்கின்ற பட்சத்தில் சிலருக்கு வீட்டில் சமைக்க கூட நேரம் கிடைப்பதில்லை. எனவே அவசர அவசரமாக கடைகளில் கிடைக்கும் பீட்சா, பர்கர், சாண்ட்விச் என துரித உணவுகளை வாங்கி சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்று விடுகிறார்கள். பலர் இது போன்ற துரித உணவுகளுக்கு அடிமையாகி விட்டனர் என்றே சொல்லலாம். பாரம்பரியமாக நாம் சாப்பிட்டு வந்த தானிய வகை உணவுகள், கூல், கஞ்சி போன்றவை பலரும் மறந்து விட்டனர். இந்த சூழலில் 100க்கு 60 பேர் காலை உணவு சாப்பிடாமல் தவிர்க்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது காலையில் நான் சாப்பிடும் உணவு விரைவில் செரிமானம் ஆகக் கூடியதாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் காலை உணவை கட்டாயம் தவிர்க்கக் கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனென்றால் இது பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றனவாம். அல்சர், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளை இது ஏற்படுத்தி விடுகிறது. எனவே காலை உணவை யாரும் தவிர்க்க கூடாது. இட்லி, கஞ்சி, கூல் போன்ற விரைவில் ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
- Advertisement -