Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இந்த சம்மருக்கு சுரைக்காய் சர்பத் செஞ்சு குடிங்க!

இந்த சம்மருக்கு சுரைக்காய் சர்பத் செஞ்சு குடிங்க!

-

சுரைக்காய் என்பது இயல்பிலேயே நீர்ச்சத்து உடையது. இது உடல் சூட்டை தணிக்க உதவும். இந்த சுரைக்காயில் வைட்டமின் சி, பி போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.இந்த சம்மருக்கு சுரைக்காய் சர்பத் செஞ்சு குடிங்க! அதுமட்டுமில்லாமல் இந்த சுரைக்காயில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது செரிமான கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும். அத்துடன் சுரைக்காய் எடையை குறைப்பதற்கும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது.

எனவே சுரைக்காயை இந்த கோடை காலத்தில் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நம் உடலுக்கு தேவையான நீர் சத்துக்கள் கிடைக்கும். அத்துடன் உடல் சூடு தணிந்து புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் சுரைக்காயானது கோடை காலத்தில் ஏற்படும் சிறுநீர் கட்டு, சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும் ஆற்றல் உடையது. அதன்படி தற்போது சுரைக்காயில் சர்பத் செய்து குடிக்கலாம் வாங்க.

சுரைக்காய் சர்பத் செய்வது எப்படி?

சுரைக்காய் சர்பத் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் இஞ்சி, நெல்லிக்காய், புதினா இலை ஆகியவைகளை நசுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பக்கம் சுரைக்காயில் ஜூஸ் தயார் செய்து அந்த ஜூஸை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது இந்த ஜூஸுடன் ரசிக்க வைத்துள்ள பொருட்களை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த சம்மருக்கு சுரைக்காய் சர்பத் செஞ்சு குடிங்க!மேலும் தேவைப்பட்டால் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து பருகலாம்.

 

MUST READ