தேவையான பொருள்கள்:
தக்காளி – 5
பாசுமதி அரிசி – 1/2 கிலோ
நெய் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
பட்டை – 2
லவங்கம் – 3
ஏலக்காய் – 4
அண்ணாச்சி பூ – 2
பிரியாணி இலை – 1
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
கொத்தமல்லி , புதினா – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
முதலில் வெங்காயம் தக்காளி, ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அதேசமயம் அரிசியை நன்கு கழுவி நீரில் ஊற வைக்க வேண்டும்.
பின் ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நெய் சேர்க்க வேண்டும். அதன் பின் நெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், அண்ணாச்சி பூ, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
அதன் பின் அதில் வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். அத்துடன் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி, பூண்டு விழுதின் பச்சை வாசனை போனபின் அதில் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றையும் சேர்த்து விட வேண்டும்.
தக்காளி நன்கு மசிந்து வதங்கிய பின் புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்க்க வேண்டும். அதன் பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் கொதித்த பின் ஊற வைத்த அரிசியை சேர்த்து அரிசிக்கு தேவையான உப்பையும் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான தக்காளி பிரியாணி தயார்.
இது ஈசியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி. இதனை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.