Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆயுட்காலத்தை குறைக்கும் துரித உணவுகள்.... தெரிந்து கொள்ளுங்கள்!

ஆயுட்காலத்தை குறைக்கும் துரித உணவுகள்…. தெரிந்து கொள்ளுங்கள்!

-

இன்றுள்ள அவசர காலகட்டத்தில் நாம் மிகவும் சோம்பேறியாக மாறி வருகிறோம். அதன்படி தோசை, இட்லி மாவு கூட வீட்டில் அரைத்து பயன்படுத்துவதில்லை. அதே போல்தான் உணவுகளில் சேர்க்கப்படும் மசாலா வகைகளையும் நேரம் ஒதுக்கி வீட்டில் அறைக்காமல் கடைகளில் கிடைக்கக்கூடிய மசாலா கடை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆயுட்காலத்தை குறைக்கும் துரித உணவுகள்.... தெரிந்து கொள்ளுங்கள்!இதனால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் உண்டாகும் என்பது பற்றி தெரியாமலேயே பயன்படுத்தி வருகிறோம். அது போல தான் துரித உணவுகளும் நாம் ஆயுட்காலத்தை குறைத்து விடும் என்பது பற்றி தெரியாமலேயே வாங்கி சாப்பிடுகிறோம். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் பெரும்பாலும், வீட்டில் அம்மா சமைத்து வைத்திருக்கும் உணவுகளை தவிர்த்து விட்டு துரித உணவுகளை உண்பதை ஒரு கலாச்சாரமாகவே மாற்றி வருகிறார்கள். அதாவது பெரும்பாலான உணவகங்கள் இரவு ஒரு மணி வரை செயல்படுகிறது. அதன்படி பீட்சா, நூடுல்ஸ், பர்கர், சாண்ட்விச், பிரைட் ரைஸ், மோமோஸ் போன்ற உணவுகள் இரவு நேரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆயுட்காலத்தை குறைக்கும் துரித உணவுகள்.... தெரிந்து கொள்ளுங்கள்!இதனை இளைஞர்கள் நள்ளிரவிலும் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். இது நம் உடம்பில் செரிமான கோளாறுகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நம் ஆயுட்காலத்தையும் குறைக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். எனவே முடிந்த வரையிலும் துரித உணவுகள் சாப்பிடுவதை குறைப்பது நமக்கு மட்டுமல்லாமல் நம் தலைமுறையினருக்கும் நல்லது. ஏனென்றால் அவர்களும் நம்மை பார்த்து தான் வளர்வார்கள்.

மேலும் துரித உணவுகளால் ஏதேனும் தொந்தரவு ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்தது.

MUST READ