Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பெண்களுக்கு நன்மை தரும் அத்திப்பழம்!

பெண்களுக்கு நன்மை தரும் அத்திப்பழம்!

-

பெண்களுக்கு நன்மை தரும் அத்திப்பழம்!நம் உடல் ஆரோக்கியத்திற்கு அத்திப்பழம் மிகவும் பயன்படுகிறது. அதேசமயம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யவும் அத்திப்பழம் உதவுகிறது. அத்திப்பழத்தை இரவில் ஊற வைத்து சாப்பிடுவதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை விரைவில் குணப்படுத்தலாம்.

அதுமட்டுமில்லாமல் கரு வளர்ச்சிக்கும் இந்த அத்திப்பழம் பெரிதும் பயன் அளிக்கிறது. அதுவும் உலர் அத்தி பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதனால் உடலில் பல நன்மைகள் உண்டாகிறது.

கர்ப்பிணி பெண்கள் 3 உலர் அத்தி பழங்களை இரவில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். அவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த அளவு அதிகரிக்கும்.

அத்தி பழங்களை இரவு நேரங்களில் சாப்பிடுவதனால் மலச்சிக்கல் தீரும். அத்திப்பழமானது கால்சியம் குறைபாட்டை நீக்கி எலும்பு தேய்மானத்தை கட்டுப்படுத்தும்.

அத்திப்பழத்தின் சாறு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.

கல்லீரல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை குணமாக, பாட்டிலில் தண்ணீர் சேர்த்து அத்திப்பழங்களை ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். நன்குரிய பழங்களை தினம் ஒரு வேலை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமடையும். மேலும் ஆஸ்துமா, உடல் உளைச்சல், இளைப்பு, வலிப்பு நோய் போன்றவைகளுக்கு சிறந்த மருந்தாகவும் இந்த அத்திப்பழம் பயன்படுகிறது.பெண்களுக்கு நன்மை தரும் அத்திப்பழம்!இவ்வாறு பல நன்மைகளை தரும் அத்திப்பழங்களை சாப்பிடுவதற்கு முன் ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் அத்திப்பழம் சாப்பிடுவதனால் எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் எடுத்துக் கொள்ளலாம்.

MUST READ