Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மலச்சிக்கல் முதல் புற்றுநோய் வரை..... தீர்வாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு!

மலச்சிக்கல் முதல் புற்றுநோய் வரை….. தீர்வாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு!

-

சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்பது மலச்சிக்கல் முதல் புற்றுநோய் வரை நல்ல தீர்வாக பயன்படுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்தக் கிழங்கு கண் பார்வைக்கு சிறந்தது. மலச்சிக்கல் முதல் புற்றுநோய் வரை..... தீர்வாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு!சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள கரோட்டினாய்டுகள் ஆண்களில் ப்ரோஸ்டேட் புற்று நோய்களை குணப்படுத்துகிறது. பொதுவாக கிழங்கு வகைகள் அதிகமான கார்போஹைட்ரேட்டை கொண்டிருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உட்பட பலரும் இது போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுவார்கள். ஆனால் சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்பது உடல் எடையை குறைக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவி புரிகிறது. மேலும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் முதல் புற்றுநோய் வரை..... தீர்வாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு!அதே சமயம் இது இயல்பிலேயே உடலை சுத்தம் செய்யும் பண்புகளையும் கொண்டிருக்கிறது. எனவே சர்க்கரை வள்ளிக்கிழங்கை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை அடிக்கடி சாப்பிடுவதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். இருப்பினும் இதனால் ஏதேனும் தொந்தரவு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ