தலைமுடி உதிர்வு முதல் ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகிய அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த வழி ஒன்றை பார்க்கலாம்.
முதலில் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் அரைக்கப் அளவு தேங்காய் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து அதை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் தேவைப்பட்டால் சிறு துண்டு இஞ்சி, 2 மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இப்போது வடிகட்டிய இந்த ஜூஸில் தேவையான அளவு நாட்டுசர்க்கரை சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர முடி வளர்ச்சி அதிகமாகும். அதாவது கறிவேப்பிலை, தேங்காய் பால் இரண்டும் சேரும்போது முடி உதிர்தல் குறைந்து வளர்ச்சி அதிகரிக்கும்.
இது தவிர கறிவேப்பிலையில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.
மேலும் கறிவேப்பிலை ஹார்மோன்களின் சமநிலையை பாதுகாக்கிறது. இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் சரி செய்யப்படும்.
அடுத்தது கறிவேப்பிலை மற்றும் தேங்காய்ப்பால் ஆகிய இரண்டும் குடலின் செரிமான சக்தியை மேம்படுத்தும். அத்துடன் உடல் சூட்டை தணிக்கும்.
அதுமட்டுமில்லாமல் சருமத்தை பொலிவுடன் வைத்திருக்கவும் உதவும். பாலூட்டும் தாய்மார்கள் கறிவேப்பிலை மற்றும் தேங்காய்ப்பால் கலந்து குடிப்பதால் உடல் சக்தி அதிகரிக்கும். இருப்பினும் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு அதை பின்பற்றுவது நல்லது.
குறிப்பு (தினமும் இந்த ஜூஸை குடிக்க தேவையில்லை. வாரத்திற்கு 3 முறை குடிக்கலாம்)