spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தலை முதல் கால் வரை... நம் அழகை அதிகப்படுத்தும் காய்கறிகளும், பழங்களும்!

தலை முதல் கால் வரை… நம் அழகை அதிகப்படுத்தும் காய்கறிகளும், பழங்களும்!

-

- Advertisement -

ஆண்கள், பெண்கள் இரு பாலருமே முக அழகை அதிகரிக்க அடிக்கடி பியூட்டி பார்லர் செல்கின்றனர். கெமிக்கல் நிறைந்த அழகு சாதன பொருட்களால் தற்போதைக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தாலும் பின்வரும் காலத்தில் பல பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே அவற்றை தடுக்க இயற்கையான முறையில் முக அழகை அதிகப்படுத்தலாம். அந்த வகையில் எளிதில் கிடைக்கும் காய்கறி, பழங்களின் மூலம் முக அழகை எப்படி அதிகப்படுத்தலாம்? என்பதை பார்க்கலாம் வாங்க.தலை முதல் கால் வரை... நம் அழகை அதிகப்படுத்தும் காய்கறிகளும், பழங்களும்!

1. முதலில் நம் தலை முடி நன்கு வளர அடிக்கடி கறிவேப்பிலை சாப்பிடுவது நல்லது. கறிவேப்பிலையை துவையலாகவோ சட்னியாகவோ செய்து சாப்பிடலாம். அடிக்கடி கறிவேப்பிலை எடுத்துக் கொள்வதனால் முடி உதிர்தல் குறைந்து அடர்த்தியான நீளமான முடி வளரும்.
2. அதேசமயம் 10 முதல் 15 சின்ன வெங்காயத்தினை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தேய்த்து வர முடி உதிர்தல் குறையும். அதேசமயம் தலையில் இருக்கும் பொடுகுகளும் காணாமல் போய்விடும்.

we-r-hiring

தலை முதல் கால் வரை... நம் அழகை அதிகப்படுத்தும் காய்கறிகளும், பழங்களும்!

3. மேலும் எலுமிச்சை சாறினை தலையில் தேய்த்துவர பொடுகுகள் மறையும்.

4. அடுத்தது நெல்லிக்காயை காயவைத்து அரைத்து பவுடராக்கி அதனை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வர நரை முடிகள் மறையும்.

5. வெள்ளரிக்காயை வட்ட வடிவில் நறுக்கி அதனை 15 நிமிடங்கள் கண்களில் வைத்துக் கொண்டால் கண்ணிற்கு குளிர்ச்சியை தருவதோடு கருவளையத்தையும் நீக்கிவிடும்.தலை முதல் கால் வரை... நம் அழகை அதிகப்படுத்தும் காய்கறிகளும், பழங்களும்!

6. நம் உதடு கருமையாக இருந்தால் புதினா இலைகளின் சாறு எடுத்து உதட்டில் தடவ கருமை மறையும். மேலும் இதேபோல் பீட்ரூட்டின் சாறு தடவினாலும் உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவப்பாக மாறுவதை காணலாம்.
7. நம் முகம் பொலிவுடன் இருக்க ஆப்பிள், மாதுளை, பீட்ரூட், கேரட் ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.
8. அதே சமயம் பீட்ரூட்டை அரைத்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ முக அழகு அதிகரிக்கும்.தலை முதல் கால் வரை... நம் அழகை அதிகப்படுத்தும் காய்கறிகளும், பழங்களும்!
9. உருளைக்கிழங்கு என்பது சருமத்தின் வறட்சியை போக்கும். தோல் சுருக்கங்கள் மறைவதற்கும் இது பயன்படுகிறது.
10. ஆரஞ்சு தோலை காயவைத்து அரைத்து பொடியாக்கி அதனை சிறிதளவு தண்ணீருடன் கலந்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர வசீகர அழகு கிடைக்கும்.

இதனை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. இதனால் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ