வைட்டமின் சி என்பது நம் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து வகையாகும். இது நோய் எதிர்ப்பு சக்திகளை வலுப்படுத்தும் ஆற்றல் உடையது. மேலும் வைட்டமின் சி என்பது கண் சார்ந்த நோய்களுக்கு தீர்வு அளிக்கக் கூடியது. எனவே ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால் அதனை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். அத்துடன் கொய்யா பழத்திலும் ஏராளமான வைட்டமின் சி சத்துக்கள் இருக்கிறது.
அதாவது கொய்யாப்பழம் என்பது வைட்டமின் சி யின் சிறந்த மூலமாகும். இந்த கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றை விட இரண்டு மடங்கு அதிகமான வைட்டமின் சி சத்துக்களை தருகிறது. அதன்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாப்பதில் கொய்யாப்பழம் முக்கிய பங்கு வைக்கிறது. மேலும் கொய்யா பழத்தில் லோ கிளைசிமிக் இன்டெக்ஸ் இருக்கும் காரணத்தால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக கருதப்படுகிறது. அதிலும் நாட்டு கொய்யா மிகவும் சிறந்தது.
அடுத்தபடியாக கொய்யாப்பழம் என்பது கொழுப்பு சத்து குறைவான பழம் என்பதால் இது பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. இது மலச்சிக்கலை தடுக்கவும் மூலத்திற்கு நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. அத்துடன் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கக்கூடியது தான் இந்த கொய்யா. மேலும் கொய்யாவின் பழம் மட்டுமல்லாமல் கொய்யாப்பழத்தின் இலை, வேர், பட்டை போன்றவைகளிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பாக உங்கள் மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.
- Advertisement -