spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்எலும்புகளுக்கு வலிமை தரும் பேரீச்சம்பழ பாயாசம் செய்வது எப்படி?

எலும்புகளுக்கு வலிமை தரும் பேரீச்சம்பழ பாயாசம் செய்வது எப்படி?

-

- Advertisement -

எலும்புகளுக்கு வலிமை தரும் பேரீச்சம்பழ பாயாசம் செய்வது எப்படி?பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் இரும்பு சத்துகள் இருக்கின்றன. இவை எலும்புகளை பலப்படுத்தவும் உதவுகிறது. அதே சமயம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்திகளையும் அதிகரிக்கிறது. குழந்தைகளும், கர்ப்பிணிகளும் இந்த பேரிச்சம் பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதனால் நல்ல பலன் கிடைக்கும்.

தற்போது பேரிச்சம் பழ பாயாசம் செய்வது எப்படி என பார்க்கலாம்.

we-r-hiring

பேரீச்சம்பழ பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

பேரீச்சம்பழம் – 20 முதல் 25
பால் – 3 கப்
துருவிய தேங்காய்- சிறிதளவு
முந்திரிப் பருப்பு – தேவையான அளவு
உலர் திராட்சை – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு

செய்முறை:

பேரீச்சம்பழ பாயாசம் செய்ய முதலில் பேரீச்சம்பழத்தில் இருக்கும் கொட்டைகளை நீக்க வேண்டும்.

பின் அதனை கழுவி அரைக்கப் பாலில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து, ஊற வைத்த பேரீச்சம்பழத்தை மிக்ஸியில் சேர்த்து அத்துடன் சிறிதளவு பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் மீதமுள்ள பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

பால் பாதி அளவு வற்றி வரும் வரை நன்கு காய்ச்ச வேண்டும்.

பின் அந்தப் பாலில் அரைத்து வைத்த பேரீச்சம்பழக் கலவையை சேர்த்து நன்கு கலக்கி விட்டு மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.எலும்புகளுக்கு வலிமை தரும் பேரீச்சம்பழ பாயாசம் செய்வது எப்படி?

அதே சமயம் இன்னொரு பாத்திரத்தில் நெய் விட்டு அதில் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சைகளை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை பாத்திரத்தில் சிறிதளவு நெய் சேர்த்து துருவிய தேங்காய்களையும் வறுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது வருத்த முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, தேங்காய் துருவல் ஆகியவற்றை பாயாசத்தில் சேர்த்து கிளறி விட வேண்டும்.

இப்போது ஆரோக்கியமான பேரீச்சம்பழ பாயாசம் தயார்.

பேரிச்சம்பழ பாயாசத்தில் உலர் திராட்சை சேர்ப்பதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கலாம்.

MUST READ