spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நாக்கில் எச்சில் ஊறும் பட்டர் புட்டிங் செய்வது எப்படி?

நாக்கில் எச்சில் ஊறும் பட்டர் புட்டிங் செய்வது எப்படி?

-

- Advertisement -

பட்டர் புட்டிங் செய்வது எப்படி?

பட்டர் புட்டிங் செய்ய தேவையான பொருட்கள்நாக்கில் எச்சில் ஊறும் பட்டர் புட்டிங் செய்வது எப்படி?

we-r-hiring

வெண்ணெய் – 100கிராம்
மைதா – 100 கிராம்
சர்க்கரை – 100 கிராம்
வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்
முட்டை – 2
பேக்கிங் பவுடர் – 1/4 ஸ்பூன்
சாக்லேட் சாஸ்- தேவையான அளவு
பாதாம், முந்திரி- தேவையான அளவு

பட்டர் புட்டிங் செய்ய முதலில் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தது அகலமான ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் குடித்து வைத்துள்ள சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கிரீம் போல விஸ்க் ஒன்றினால் அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் முட்டை, பேக்கிங் பவுடர், வெண்ணிலா எசன்ஸ், மைதா ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.நாக்கில் எச்சில் ஊறும் பட்டர் புட்டிங் செய்வது எப்படி?

அதேசமயம் சிறிய அலுமினியம் கிண்ணம் ஒன்றில் சிறிதளவு வெண்ணெய் தடவி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த கிண்ணத்தில் மைதா மாவு கலவையை ஊற்றி அதனை அப்படியே மைக்ரோ ஓவனில் 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 30 நிமிடங்கள் வைக்க வேண்டும். பின்னர் ஓவனிலிருந்து கிண்ணத்தை வெளியே எடுத்து அதை சில நிமிடங்கள் ஆறவிட்டு அதை வேறொரு தட்டிற்கு மாற்றி அதன் மேல் சாக்லேட் சாஸ் மற்றும் பாதாம் – முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை சேர்த்து அலங்கரித்து பரிமாற வேண்டும்.நாக்கில் எச்சில் ஊறும் பட்டர் புட்டிங் செய்வது எப்படி?

குறிப்பு:

ஓவனுக்கு பதிலாக இட்லி பாத்திரத்தில் கிண்ணத்தை வைத்து கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் வரை மூடி போட்டு வேக வைத்தாலும் பட்டர் புட்டிங் தயாராகிவிடும். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

MUST READ