Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தேங்காய் மஸ்ரூம் சூப் செய்வது எப்படி?

தேங்காய் மஸ்ரூம் சூப் செய்வது எப்படி?

-

- Advertisement -
kadalkanni

தேங்காய் மஸ்ரூம் செய்ய தேவையான பொருட்கள்:

தேங்காய் – அரை மூடிதேங்காய் மஸ்ரூம் சூப் செய்வது எப்படி?
மஸ்ரூம் – அரை கப்
இஞ்சி, பூண்டு – சிறிதளவு
வெங்காயம் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
தேங்காய் பால் – அரை கப்
எலுமிச்சம்பழம் – 1
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
தண்ணீர் – 1/2 லிட்டர்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:தேங்காய் மஸ்ரூம் சூப் செய்வது எப்படி?

முதலில் தேங்காயை விழுதுபோன்று அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மஸ்ரூம்களை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேசமயம் இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை விழுதாக்கி கொள்ள வேண்டும். எடுத்து வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தேங்காய் உள்ளது, மஸ்ரூம், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்னர் அதில் தேங்காய் பால், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். தேங்காய் மஸ்ரூம் சூப் செய்வது எப்படி?தேங்காய் பால் சேர்த்துள்ளதால் ஒரு கொதி வருவதற்கு முன்னரே அடுப்பை அணைத்து இறக்கி விட வேண்டும்.

இப்போது தேங்காய் மஸ்ரூம் சூப் ரெடி. கொத்தமல்லி இலைகளை தூவி சூடாக பரிமாறலாம். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

MUST READ