Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் பன்னீர் அல்வா..... செய்வது எப்படி?

மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் பன்னீர் அல்வா….. செய்வது எப்படி?

-

பன்னீர் அல்வா செய்வது எப்படி?

பன்னீர் அல்வா செய்ய முதலில் பன்னீரை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் அல்லது துருவியும் எடுத்துக் கொள்ளலாம்.மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் பன்னீர் அல்வா..... செய்வது எப்படி?

அதே சமயம் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சிறிதளவு நெய் சேர்த்து, நெய் காய்ந்த பின்னர் அதில் துருவிய அல்லது அரைத்த பன்னீரை சேர்த்து சிறிது நேரம் வறுத்துக் கொள்ள வேண்டும். பன்னீர் வறுபட்டு வெளிப்படுத்து நிறமாக மாறும். அந்த சமயத்தில் ஒரு டம்ளர் அளவு பால் சேர்க்க வேண்டும். பால் நன்கு கொதித்து பன்னீரும் வெந்து வந்த பிறகு தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும்.

பின் கடாயை மூடி ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்த சமைக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இடை இடையில் அடிப்பிடிக்காதவாறு அல்வாவை கிளறி விட வேண்டும். அப்போதுதான் அல்வா அடிப்பகுதியில் ஒட்டாமல் வரும். சில நிமிடங்களுக்கு பின்னர் பால் முழுவதும் வற்றி வரும் சமயத்தில் இரண்டு ஏலக்காயை எடுத்து இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் பன்னீர் அல்வா..... செய்வது எப்படி?இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பாதாமை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அல்வா கிட்டத்தட்ட தயாராகி வந்தது வருக்கிய பாதாமை சேர்த்து கலக்கி விட வேண்டும். தேவைப்பட்டால் இந்த ஸ்டேஜில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது சுவையான பன்னீர் அல்வா தயாராகி விட்டது. வேறொரு பாத்திரத்தில் மாற்றி சூடாக பரிமாறலாம்.

MUST READ