Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அடேங்கப்பா.... செம டேஸ்டான பன்னீர் பாயாசம் செய்வது எப்படி?

அடேங்கப்பா…. செம டேஸ்டான பன்னீர் பாயாசம் செய்வது எப்படி?

-

அடேங்கப்பா.... செம டேஸ்டான பன்னீர் பாயாசம் செய்வது எப்படி?பன்னீர் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

பன்னீர் – அரை கப்
பால் – 2 கப்
கண்டன்ஸ்டு மில்க் – கால் கப்
சர்க்கரை – 4 தேக்கரண்டி
குங்குமப்பூ – சிறிதளவு
சோள மாவு – ஒரு தேக்கரண்டி
முந்திரி – 10
நெய் – தேவையான அளவு
ஏலக்காய் – 4

செய்முறை:

பன்னீர் பாயாசம் செய்வதற்கு முதலில் பன்னீரை நன்கு மசித்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் ஏலக்காயை தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் முந்திரிப் பருப்பினை நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சோள மாவினை தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி சிறு தீயில் பாலை கொதிக்க விட வேண்டும். அதன் பின் அதில் பன்னீரை சேர்த்து மூன்று நிமிடங்கள் வரை கைவிடாமல் கிளறி விட வேண்டும்.

பின்னர் அதில் கரைத்து வைத்த சோள மாவினை ஊற்றி கிளறி விட வேண்டும். அதன் பின் சர்க்கரையை சேர்த்து கலக்க வேண்டும்.

ஓரளவிற்கு பாயாசம் கெட்டியான பதத்திற்கு வரும் சமயத்தில் கண்டன்ஸ்டு மில்கினை சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்.

பின் தட்டி வைத்த ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரிகள் ஆகியவற்றை சேர்த்து கலந்து விட வேண்டும். கூடுதல் சுவைக்காக இன்னும் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது அடுப்பினை அணைத்து ஐந்து நிமிடம் ஆறவிட்டு பரிமாற வேண்டும்.அடேங்கப்பா.... செம டேஸ்டான பன்னீர் பாயாசம் செய்வது எப்படி?

செம டேஸ்டான பன்னீர் பாயாசம் தயார். பன்னீரில் கால்சியம் சத்துக்களும், புரத சத்துக்களும் நிறைந்திருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பன்னீர் பாயாசத்தை சாப்பிடலாம்.

MUST READ