Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அத்திப்பழ அல்வா!

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அத்திப்பழ அல்வா!

-

- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அத்திப்பழ அல்வா செய்வது எப்படி?

அத்திப்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்:உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அத்திப்பழ அல்வா!

அத்திப்பழம் – 250 கிராம்
கோயா – 200 கிராம்
சர்க்கரை – தேவையான அளவு
ஏலக்காய் – 3
லவங்கப்பட்டை – 1
தண்ணீர் – தேவையான அளவு
நெய் – 4 ஸ்பூன்

செய்முறை:

அத்திப்பழ அல்வா செய்ய முதலில் அத்திப்பழத்தினை கழுவி நீரில் ஊற வைக்க வேண்டும். அடுத்தது ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் ஏலக்காய், லவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்ந்து வறுக்க வேண்டும். அத்துடன் நீரில் ஊற வைத்த அத்திப்பழங்களையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

ஊற வைத்த தண்ணீரையும் அதில் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். அதன் பின்னர் சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளறி விட வேண்டும். சில நிமிடங்கள் கழித்து அத்தி பழங்களை அப்படியே கரண்டியால் மசித்து விடவேண்டும். தண்ணீர் வற்றி அத்திப்பழம் நன்கு வெந்து அல்வா பதத்திற்கு வரும் வரை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். இடையிடையில் கிளறி விட்டால் நல்லது.

அதேசமயம் இடையிடையில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி விட வேண்டும். இப்போது அல்வாவானது பாத்திரத்தில் ஒட்டாதவாறு வந்தபின் கோயாவை சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும். அதன் பின் 5 நிமிடங்கள் அப்படியே அடுப்பில் விட்டுவிட்டு பின்னர் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

ஆரோக்கியமான அத்திப்பழ அல்வா தயார்.உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அத்திப்பழ அல்வா!

குறிப்பு: கூடுதல் சுவைக்காக பாதாம், முந்திரி ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் இதை காற்று புகாத பாட்டிலில் போட்டு ஒரு மாத காலம் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.

MUST READ