Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆரோக்கியமான வரகு - கோதுமை பணியாரம்.....செய்து பார்க்கலாம் வாங்க!

ஆரோக்கியமான வரகு – கோதுமை பணியாரம்…..செய்து பார்க்கலாம் வாங்க!

-

ஆரோக்கியமான வரகு - கோதுமை பணியாரம்!ஆரோக்கியமான வரகு கோதுமை பணியாரம்!

வரகு – கோதுமை பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:

வரகரிசி மாவு – ஒரு கப்
கோதுமை மாவு – அரை கப்
வெல்லம் – அரை கப்
வாழைப்பழம் – 2
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

பணியாரம் செய்வதற்கு முதலில் வெல்லத்தை எடுத்து சிறிதளவு தண்ணீரில் கரைத்து, அதனை தூசுகள் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் கோதுமை மாவுடன் சேர்த்து எடுத்து வைத்துள்ள வாழைப்பழங்களை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் வரகரிசி மாவு, கோதுமை மாவுடன் வசித்த வாழைப்பழங்கள் ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் வடிகட்டிய வெல்லத்தையும் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பின் அடுப்பில் குழிப்பணியாரம் கல்லை வைத்து, கல் சூடானதும் தேவையான அளவு, எண்ணெய் தடவி மாவினை ஊற்ற வேண்டும்.

இருபுறமும் திருப்பிப் போட்டு மாவினை வேக விட வேண்டும்.ஆரோக்கியமான வரகு - கோதுமை பணியாரம்!

மாவு வெந்ததும் தயாரான பணியாரங்களை எடுத்து சூடாக பரிமாறவும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த இந்த வரகு பணியாரத்தை  சாப்பிடலாம்.

MUST READ