Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இது போன்று ஒரு முறை 'இட்லி 65' செஞ்சு பாருங்க!

இது போன்று ஒரு முறை ‘இட்லி 65’ செஞ்சு பாருங்க!

-

இட்லி 65 செய்வது எப்படி?

இட்லி 65 செய்ய தேவையான பொருட்கள்:இது போன்று ஒரு முறை 'இட்லி 65' செஞ்சு பாருங்க!

இட்லி – 5
கடலை மாவு – சிறிதளவு
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
சீரகம் – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை:

இட்லி 65 செய்ய முதலில் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளியை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் இட்லியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இப்போது கடலை மாவையும் மிளகாய் தூளையும் கலந்து கொள்ள வேண்டும். இட்லி துண்டுகளின் மேல் இந்த கலவையை தூவி கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.இது போன்று ஒரு முறை 'இட்லி 65' செஞ்சு பாருங்க!

அதே சமயம் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் இட்லி துண்டுகளை பொரித்து எடுக்க வேண்டும்.

பின்னர் மற்றொரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் சீரகம், இஞ்சி பூண்டு பேஸ்ட் போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளி சாறை ஊற்றி நன்றாக வதக்க வேண்டும். இது போன்று ஒரு முறை 'இட்லி 65' செஞ்சு பாருங்க!தக்காளி சாறு கெட்டியான பதத்திற்கு வந்ததும் பொறுக்கி வைத்துள்ள இட்லி துண்டுகளை போட்டு நன்றாக பிரட்டி விட வேண்டும். அடுத்ததாக கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பினை அணைத்து விட வேண்டும். அவ்வளவுதான் அருமையான இட்லி 65 தயார்.

MUST READ