spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இனிப்பு சீடை செய்வது எப்படி?

இனிப்பு சீடை செய்வது எப்படி?

-

- Advertisement -

இனிப்பு சீடை செய்ய தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 250 கிராம்
வெல்லம் – 200 கிராம்
ஏலக்காய் – 4
எள் – சிறிதளவு
தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
வறுத்து அரைத்த உளுத்தம் மாவு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 500 மில்லி லிட்டர்இனிப்பு சீடை செய்வது எப்படி?

we-r-hiring

செய்முறை:

முதலில் 200 கிராம் வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

பின் பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை வடிகட்டி சுத்தமான துணியில் போட்டு நிழலில் சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.

பின் மிக்ஸியில் அரைத்து, மாவினை சல்லடையில் சலிக்க வேண்டும். சலித்த மாவை வாணலியில் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனை உருட்டு பதத்தில் பாகு போன்று காய்ச்ச வேண்டும்.

இப்போது தயார் செய்து வைத்த பாகுடன் வறுத்து வைத்துள்ள மாவு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். எள்ளையும் வறுத்து மாவுடன் சேர்க்க வேண்டும்.

அத்துடன் வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, தேங்காய் துருவல் ஆகியவற்றையும் சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.

பின்னர் நன்கு பிசைந்து நெல்லிக்காய் அளவு சீடைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.இனிப்பு சீடை செய்வது எப்படி?

அதேசமயம் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அடுப்பினை மிதமான தீயில் வைத்து சீடைகளாக உருட்டி வைத்த மாவினை சேர்த்து வேகவிட்டு எடுக்க வேண்டும்.

இப்போது இனிப்பு சீடை தயார்.

MUST READ