ஜவ்வரிசி வடை செய்ய தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி – 3/4 கப்
உருளைக்கிழங்கு – 2
வேர்க்கடலை – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
ஜவ்வரிசி வடை செய்ய முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்தது வேர்க்கடலையை வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கியும் இஞ்சியை துருவியும் வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி மூன்று முதல் நான்கு மணி நேரங்கள் வரை ஊற வைக்க வேண்டும். அடுத்தது வேர்க்கடலையை வறுத்து அதனை மிக்ஸியில் போட்டு பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஊற வைத்திருக்கும் ஜவ்வரிசியை வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதில் உருளைக்கிழங்கையும் மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
அடுத்ததாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி காய வைக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்திருக்கும் கலவையை உருண்டைகளாக எடுத்து வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்க வேண்டும். இப்போது அருமையான ஜவ்வரிசி வடை தயார். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.
குறிப்பு:
ஜவ்வரிசி – உருளைக்கிழங்கு கலவையில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.