குப்பைமேனி கீரை செய்ய தேவையான பொருட்கள்:
குப்பைமேனி கீரை – ஒரு கைப்பிடி அளவு
பாசிப்பருப்பு – 50 கிராம்
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 2
பிரியாணி இலை – 1
மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்
கான்பிளார் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கான்பிளார் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் குக்கர் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி, இலை, பாசிப்பருப்பு, குப்பைமேனி கீரை உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மூடி இரண்டு விசில் வரும் வரை வேக விட வேண்டும்.
அதைத்தொடர்ந்து வேக வைத்த கீரையை எடுத்து மசித்து வடிகட்டி வைக்க வேண்டும். அத்துடன் மிளகுத்தூள், சீரகத்தூள், கான்பிளார் கரைசல் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி விட வேண்டும் இப்போது ஆரோக்கியமான குப்பைமேனி கீரை சூப் தயார்.
தேவைப்பட்டால் இந்த சூப்பை பரிமாறும் போது சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு பரிமாறலாம். இது கசப்புத் தன்மை உடையதாக இருந்தாலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது நல்ல மருந்தாக பயன்படுகிறது.