Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பச்சை பட்டாணியில் கேக் செய்வது எப்படி?

பச்சை பட்டாணியில் கேக் செய்வது எப்படி?

-

பச்சை பட்டாணி கேக் செய்து பார்க்கலாம் வாங்க

பச்சை பட்டாணி கேக் செய்ய தேவையான பொருட்கள் :பச்சை பட்டாணியில் கேக் செய்வது எப்படி?

பச்சை பட்டாணி – 2 கப்
ரவை – 6 ஸ்பூன்
கடலை மாவு – 2 கப்
இஞ்சி – ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
ஈஸ்ட் – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – 5 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – தேவைக்கேற்ப
சீரகம் – 1 ஸ்பூன்
எள்ளு – 1 ஸ்பூன்
பால் – ஒரு கப்

பச்சை பட்டாணி கேக் செய்ய முதலில் பாலை சூடாக்கி ஆற வைத்து வெதுவெதுப்பான சூட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் பச்சை பட்டாணியை 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ரவை, கடலை மாவு, உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். அத்துடன் அரைத்து வைத்துள்ள பட்டாணி விழுதை சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும்.

இப்போது ஈஸ்டை சிறிதளவு வெதுவெதுப்பான நீரில் அல்லது பாலில் ஊற வைக்க அது பொங்கி வரும். அதன் பிறகு ஈஸ்டை, பட்டாணி, கடலை மாவு கலவையில் சேர்த்து விட வேண்டும்.பச்சை பட்டாணியில் கேக் செய்வது எப்படி?

பின் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். இப்போது ஒரு கட்டில் எண்ணெய் தடவி வைத்துக்கொள்ள வேண்டும். அதில் மாவு கலவையை சேர்த்து குக்கரில் வைத்து வேகவிட வேண்டும். பட்டாணி, கடலை மாவு, ரவை ஆகிய கலவை வெந்து வந்த பிறகு சீரகம், எள்ளு, பெருங்காயம் சேர்த்து தாளித்து அதில் கொட்டி விட வேண்டும்.

பின்னர் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சட்னி அல்லது சாஸுடன் பரிமாற வேண்டும்.

சுவையான பச்சை பட்டாணி கேக் தயார்.

MUST READ