spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நேந்திரம் பழத்தில் பாயாசம் செய்வது எப்படி?

நேந்திரம் பழத்தில் பாயாசம் செய்வது எப்படி?

-

- Advertisement -

நேந்திரம் பழத்தில் பாயாசம் செய்வது எப்படி?நேந்திரம் பழம் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

நேந்திரம் பழம் – 3
வெல்லம் – 1/4 கிலோ
முதல் தேங்காய் பால் – 1 கப்
இரண்டாம் தேங்காய் பால் – 1 1/2 கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
சுக்குத்தூள் – சிறிதளவு
தேங்காய் – சிறிதளவு
முந்திரி பருப்பு – 10
நெய் – 5 ஸ்பூன்

we-r-hiring

செய்முறை:

நேந்திரம் பழம் பாயாசம் செய்ய முதலில் தேங்காயை, பல்லு பல்லாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேசமயம் நேந்திரம் பழங்களை தோலுரித்து அதனை பத்து நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைக்க வேண்டும்.

பழங்கள் வெந்தபின் அதனை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் மிதமான சூட்டில் வைக்க வேண்டும். வெல்லம் நன்கு கரைந்த பின் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடி கனமான ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள நேந்திரம் பழம் விழுதுகளை சேர்த்து அத்துடன் வெல்லத்தையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பின் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பிறகு ஏலக்காய் தூள், சுக்கு தூள், 2 ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட வேண்டும்.

அதேசமயம் மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி மேலே கொடுக்கப்பட்டுள்ள முந்திரிப் பருப்புகளையும், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காயையும் சேர்த்து தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.நேந்திரம் பழத்தில் பாயாசம் செய்வது எப்படி?

இப்போது தயாராகி வரும் பாயாசத்தில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு, தேங்காயை சேர்த்து கலந்து விட வேண்டும். கடைசியாக முதல் தேங்காய் பால் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்களில் இறக்கி விட வேண்டும்.

இப்போது டேஸ்டான நேந்திரம் பழம் பாயாசம் தயார். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

MUST READ