Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சோயா இடியாப்பம் செய்வது எப்படி?

சோயா இடியாப்பம் செய்வது எப்படி?

-

சோயா இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

சோயா மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
உப்பு – தேவைக்கு ஏற்ப
கேரட் – 1/4 கப்
குடைமிளகாய் – பாதி
தக்காளி – 1
கடுகு, உளுத்தம்பருப்பு – தேவையான அளவு
கடலைப்பருப்பு – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் – 2
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவுசோயா இடியாப்பம் செய்வது எப்படி?

செய்முறை:

சோயா இடியாப்பம் செய்ய முதலில் சோயா மற்றும் அரிசி மாவை தண்ணீரில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் இதனை ஒரு இட்லி தட்டில் துணியில் கட்டி ஆவியில் வேக வைக்க வேண்டும். அதில் தண்ணீர் தெளித்து சிறிது உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஓமப்பொடி அச்சில் பிழிந்து ஆவியில் வேகவைத்து இடியாப்பத்தை நன்கு உதிர்த்து கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, வேலை கொடுக்கப்பட்ட காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். லேசாக வதங்கியதும் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.சோயா இடியாப்பம் செய்வது எப்படி? இப்போது உதிர்த்து ஆற வைத்துள்ள இடியாப்பத்தை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

ஒரு நிமிடம் கிளறிய பின் அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறலாம்.

அருமையான சோயா இடியாப்பம் தயார்.

MUST READ