ஆலூ சப்ஜி செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1
தக்காளி – 2
சீரகம் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1/2 ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:
ஆலூ சப்ஜி செய்வதற்கு முதலில் கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் வெங்காயம், தக்காளி, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சீரகம் போட்டு தாளிக்க வேண்டும். அதன் பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
அதன் பிறகு அதில் உப்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள், கஸ்தூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
அதே சமயம் உருளைக்கிழங்கையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஐந்திலிருந்து ஆறு விசில் வரும் வரை வேக விட வேண்டும்.
உருளைக்கிழங்கு வெந்து வந்த பிறகு குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இப்போது சூப்பரான ஆலூ சப்ஜி தயார். இதனை சப்பாத்தி, பூரி போன்றவைகளுக்கு சைட்டிஷாக பயன்படுத்தலாம்.