தேங்காய் திரட்டுப் பால் செய்ய தேவையான பொருட்கள்:
பால் – ஒரு லிட்டர்
வெல்லம் – ஒரு கப் (250 கிராம் )
தேங்காய் – அரை மூடி
பாசிப்பருப்பு – 1 ஸ்பூன்
நெய் – 1 கப்
ஏலக்காய் – 3
செய்முறை:
தேங்காய் திரட்டுப் பால் செய்ய முதலில் வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் தேங்காயை துருவி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஏலக்காயை தட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் பருப்பினை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது பாசிப்பருப்பை முதலில் மிக்ஸியில் போட்டு பொடியாக்கி பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு அகன்ற பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி அதனை நன்கு காய்ச்ச வேண்டும். இந்த சமயத்தில் கொடுத்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு கிளறி அடுப்பினை அணைத்து விட வேண்டும்.
குறிப்பு : சுத்தமான வெல்லமாக இருந்தால் அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் வெல்லத்தை தனியாக காய்ச்சி அதனை வடிகட்டி பாலில் சேர்க்க வேண்டும்.
இப்போது காய்ச்சிய பாலுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பால் நன்கு கெட்டியானதும் தேவையான அளவு நெய் ஊற்றி பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காய் தூளை சேர்த்து கிளறி விட்டு அடுப்பினை அணைத்து விட வேண்டும்.
இப்போது டேஸ்டான தேங்காய் திரட்டுப் பால் தயார். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. இதனை ஆறவைத்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி சாப்பிடலாம்.