வேப்பம் பூ ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
வேப்பம் பூ – 1 ஸ்பூன்
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு, உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
நெய் – ஒரு ஸ்பூன்
செய்முறை
வேப்பம்பூ ரசம் செய்ய முதலில் வேப்பம் பூவை மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
அதேசமயம் புளியை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வடிகட்டிய புளி கரைச்சலுடன் உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்து வந்தவுடன் ஒரு சிறிய பாத்திரத்தில் நெய் சேர்த்து நெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்தவற்றை கொதித்த ரசத்தில் ஊற்றி கிளறி விட வேண்டும்.
கடைசியாக வறுத்து வைத்துள்ள வேப்பம் பூவை நெய்யில் வதக்கி ரசத்தில் சேர்த்து இறக்கி விட வேண்டும். வேப்பம்பூ சேர்த்தபின் ரசத்தை கொதிக்க வைக்க கூடாது.
இப்போது வேப்பம் பூ ரசம் தயார்.