spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அகத்திக் கீரையில் சூப் செய்து பார்க்கலாம் வாங்க!

அகத்திக் கீரையில் சூப் செய்து பார்க்கலாம் வாங்க!

-

- Advertisement -

அகத்திக் கீரை, ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. வாய்ப்புண், வயிற்று புண் ,தொண்டை புண் ஆகியவற்றை இந்த அகத்திக்கீரை சரி செய்கிறது. வாரம் ஒரு முறை இந்த அகத்திக் கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். மலச்சிக்கல் பிரச்சனைக்கும் இந்த அகத்திக்கீரை நல்ல தீர்வளிக்கிறது.அகத்திக் கீரையில் சூப் செய்து பார்க்கலாம் வாங்க!

தேவையான பொருள்கள்:
அகத்திக்கீரை – ஒரு கட்டு
துவரம் பருப்பு – கால் கப்
பச்சரிசி – கால் கப்
பூண்டு பல் – 10
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 2
கிராம்பு – 3
பட்டை – 1
சீரகம் – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

we-r-hiring

செய்முறை:

அகத்திக் கீரையை நன்றாக கழுவி பொடி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து சின்னதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் தக்காளியையும் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு துவரம் பருப்பு, பச்சரிசி, பூண்டு பல், கிராம்பு, பட்டை, சீரகம் ஆகியவற்றை குக்கரில் போட்டு 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ஐந்திலிருந்து ஆறு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

பின் இவை அனைத்தும் வெந்து வந்த பிறகு ஒரு கரண்டியால் நன்கு மசிக்க வேண்டும்.அகத்திக் கீரையில் சூப் செய்து பார்க்கலாம் வாங்க!

பின்பு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி அதன் பின் அதனை வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும். இப்போது அகத்திக்கீரை சூப் ரெடி.

பரிமாறும் சமயத்தில் மிளகுத்தூள் தூவி பரிமாற வேண்டும்.

MUST READ