Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆரோக்கியமான கேழ்வரகு தட்டு வடை செய்து பார்க்கலாம் வாங்க!

ஆரோக்கியமான கேழ்வரகு தட்டு வடை செய்து பார்க்கலாம் வாங்க!

-

ஆரோக்கியமான கேழ்வரகு தட்டு வடை செய்து பார்க்கலாம் வாங்க!கேழ்வரகு தட்டு வடை செய்ய தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 50 கிராம்
உளுந்து – 50 கிராம் கடலைப்பருப்பு – 50 கிராம்
வெங்காயம் – தேவையான அளவு
மிளகாய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – தேவையான அளவு

செய்முறை:

முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.

பின் கேழ்வரகு மாவுடன் அரைத்து வைத்த உளுத்தம் பருப்பு மாவு, கடலை பருப்பு மாவு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து கலந்து கொள்ள வேண்டும்.ஆரோக்கியமான கேழ்வரகு தட்டு வடை செய்து பார்க்கலாம் வாங்க!

பின் இந்த கலவையை உருண்டையாக உருட்டி வாழை இலையில் போட்டு வடை போன்று தட்டிக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது கேழ்வரகு தட்டை வடை தயார். கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. இந்த வடை எலும்பு வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது. எனவே இந்த கேழ்வரகு வடையினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.

MUST READ