Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வீட்டிலேயே குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படி?

வீட்டிலேயே குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படி?

-

- Advertisement -
kadalkanni

குழம்பு மிளகாய் தூள் செய்ய தேவையான பொருட்கள்:வீட்டிலேயே குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படி?

தனியா – 500 கிராம்
அரிசி – 100 கிராம்
உளுந்து – 100 கிராம்
மிளகாய் வற்றல் – 500 கிராம்
சீரகம் – 250 கிராம்
மிளகு – 100 கிராம்
சோம்பு – 50 கிராம்
கடுகு – 25 கிராம்
வெந்தயம் – 25 கிராம்
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா 200 கிராம்
மஞ்சள் தூள் – 100 கிராம்
பெருங்காயத்தூள் – 25 கிராம்
எண்ணெய் – சிறிதளவு

செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் என்னை விட்டு அதில் தனியா மிளகாய் வற்றல், சீரகம், சோம்பு, மிளகு, ஆகியவற்றை சேர்த்து கைவிடாமல் அனைவரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

அதன் பின் கடுகு, வெந்தயம் ஆகியவற்றையும் தனியாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு பெருங்காயத்தூள் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது வேறொரு கடாயில் எண்ணெய் விடாமல் அரிசி, உளுந்து ஆகியவற்றை வறுக்க வேண்டும்.

அடுத்ததாக வறுத்து வைத்துள்ள அனைத்தையும் தனித்தனியே ஆற வைக்க வேண்டும். ஆறிய பின்னர் அனைத்தையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது மண மணக்கும் குழம்பு மிளகாய் தூள் தயார்.வீட்டிலேயே குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படி?

இதனை புளிக்குழம்பு, மீன் குழம்பு, கார குழம்பு, வெந்தய குழம்பு ஆகிய அனைத்து குழம்பு வகைகளுக்கும் சேர்த்து சமைக்கலாம்.

குறிப்பு:
1. பொன்னி அரிசி, பச்சரிசி என எந்த வகையான அரிசியையும் சேர்த்து அரைக்கலாம்.
2. வறுக்கும் போது குறைவான அளவில் எண்ணெய் விட்டு வறுக்க வேண்டும். அப்போதுதான் மசாலா நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

MUST READ