spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சுவையான பைனாப்பிள் கேசரி செய்வது எப்படி?

சுவையான பைனாப்பிள் கேசரி செய்வது எப்படி?

-

- Advertisement -

பைனாப்பிள் கேசரி செய்ய தேவையான பொருட்கள்:

ரவை – ஒரு கப்
பால் – 1 1/2 கப்
பைனாப்பிள் (அண்ணாச்சி பழம்)- 1/4 பழம்
உப்பு – ஒரு சிட்டிகை
சர்க்கரை – 2 கப்
தண்ணீர் – ஒரு கப்
நெய் – 30 கிராம்
முந்திரிப் பருப்பு – 15
பைனாப்பிள் எசன்ஸ் – 2 தேக்கரண்டி
கலர் பவுடர் – ஒரு சிட்டிகைசுவையான பைனாப்பிள் கேசரி செய்வது எப்படி?

we-r-hiring

செய்முறை:
முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரிப் பருப்புகளை நன்கு வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் மற்றொரு கடாயில் நெய் சேர்த்து ரவையை வறுத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் பைனாப்பிளை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் பைனாப்பிள் துண்டுகளை சர்க்கரையில் பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அதே சமயம் பால் மற்றும் தண்ணீர் உடன் கலர் பவுடரை கலந்து கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் நன்கு கொதித்து வரும் நிலையில் வறுத்து வைத்த ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறி விட வேண்டும். ரவையானது முக்கால் பாகம் வெந்து
வந்தவுடன் உப்பு , சர்க்கரை மற்றும் பைனாப்பிள் ஆகியவற்றை சேர்த்து கிளறி விட வேண்டும்.சுவையான பைனாப்பிள் கேசரி செய்வது எப்படி?

பின் வறுத்த முந்திரிகளை சேர்த்து அத்துடன் பைனாப்பிள் எஸ்சென்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இப்போது சுவையான பைனாப்பிள் கேசரி தயார்.

MUST READ