இன்றுள்ள காலகட்டத்தில் ரத்த அழுத்தத்தினால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு, அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே தற்போது ரத்த அழுத்தத்தை குறைக்கவும் அதனை சீராக வைத்திருக்கவும் சில சித்த வைத்திய குறிப்புகளை காணலாம்.
ரத்த அழுத்தம் சீரான முறையில் இருப்பதற்கு மோரில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகி வரலாம்.

உயர் ரத்த அழுத்தம் குறைய கேரட், தக்காளி, கொத்தமல்லி, அன்னாச்சி, பேரிச்சை, ஆரஞ்சு, வெள்ளரி, முருங்கை, வாழைத்தண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கறிவேப்பிலையை தண்ணீர் சேர்த்து அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
அதிக ரத்த அழுத்தம் உடையவர்கள் அகத்திக்கீரையினை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் குறைய தொடங்கும்.
ஆப்பிள், மாம்பழம், பேரிக்காய் போன்ற பழ வகைகளை உண்பதாலும் ரத்த அழுத்தம் குறையும். எனவே உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் இந்த பழ வகைகளை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.
குறைந்த ரத்த அழுத்தம் உடையவர்கள் ஜடமான்சி வேர், இலவங்கப்பட்டை, கற்பூரம் ஆகியவற்றை நன்றாக இடித்து தண்ணீர் சேர்த்து காய்ச்சி அதனை வடிகட்டி குடித்து வந்தால் குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்யலாம்.
செவ்வந்திப் பூக்களை நிழலில் உலர்த்தி, பின் அதனை தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி அதனுடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
முருங்கைக் கீரையின் சாறு எடுத்து அதில் சிறிதளவு சீரகப் பொடியை ஊற வைத்து பின் அதனில் தேன் குலைத்து சாப்பிட்டு வர உயர் ரத்த அழுத்தம் குணமாகும்.
உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க வெந்தயம், பாசிப்பயறு, கோதுமை ஆகியவற்றையும் முதல் நாள் இரவு ஊற வைக்க வேண்டும். பின் அதனுடன் மிளகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து காலை வேளையில் தோசை சுட்டு சாப்பிட்டு வரலாம்.
இருந்த போதிலும் இம்முறைகளை ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.