Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் புற்றுநோய் வரவே வராது!

தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் புற்றுநோய் வரவே வராது!

-

பச்சை வெங்காயத்தில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வெங்காயத்தில் குறைந்த கலோரிகள் இருப்பது மட்டுமில்லாமல் அதிக நார்ச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் புற்றுநோய் வரவே வராது!இந்த வெங்காயம் உணவு சமைப்பதற்கு பயன்படுவதோடு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பயன்படுகிறது. அந்த வகையில் வெங்காயம் ஆக்சிஜனேற்றத்திற்கு உதவுகிறது. அடுத்தபடியாக பச்சை வெங்காயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பச்சை வெங்காயம் என்பது மாரடைப்பு ஏற்படுவதையும் குறைக்கிறது. வெங்காயத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதேசமயம் பச்சை வெங்காயம் பெருங்குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களையும் அபாயத்தை குறைக்கும் திறனுடையது. அதன்படி இது புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை குறைக்கும். தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் புற்றுநோய் வரவே வராது!அதுமட்டுமில்லாமல் வெங்காயம் சாப்பிடுபவர்களுக்கு 15 சதவீதம் புற்றுநோயின் ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இது பெருங்குடல் புற்றுநோய் மட்டுமல்லாமல் கருப்பை புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கவும் பயன்படுகிறது. மேலும் தினமும் பச்சை வெங்காயம் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே வழக்கமான அளவுகளில் பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதைவிட அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. இருப்பினும் புற்றுநோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ