Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தூக்கமின்மை பிரச்சனையா?.... அப்போ இதை செய்யுங்க!

தூக்கமின்மை பிரச்சனையா?…. அப்போ இதை செய்யுங்க!

-

இன்றுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் இரவில் தூக்கம் வராமல் பெரும் சிரமப்படுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் படுக்கைக்கு சென்ற பிறகும் செல்போன் பயன்படுத்துவது தான். தூக்கமின்மை பிரச்சனையா?.... அப்போ இதை செய்யுங்க!அதாவது படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு வரை செல்போன்களை பயன்படுத்துதல் கூடாது. ஏனெனில் அதில் உள்ள வெளிச்சம் நம் கண்ணில் படும்போது தூக்கமின்மை பிரச்சனை உண்டாகிறது. அதேசமயம் சிலருக்கு செல்போன் பயன்படுத்தவில்லை என்றாலும் இந்த பிரச்சனை இருக்கிறது. அதற்குக் காரணம் சரியான நேரத்தில் தூங்கி எலும்பழக்கம் இல்லாமை தான். மேலும் மன அழுத்தத்தின் காரணமாகவும் இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்ய சில டிப்ஸ்களை பார்க்கலாம்.தூக்கமின்மை பிரச்சனையா?.... அப்போ இதை செய்யுங்க!

தூங்குவதற்கு முன்பாக வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு தூங்கும் போது உடலில் இருக்கும் சோர்வுகள் நீங்கி நல்ல தூக்கம் உண்டாகும்.

மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்வது நல்லது. எனவே தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தினால் நிம்மதியான தூக்கம் பெறலாம்.

தூங்குவதற்கு முன்பாக விருப்பமான புத்தகங்களை படிக்கலாம். அது கதையாகவோ இல்ல வேற ஒரு புத்தகமாகவும் கூட இருக்கலாம். அமைதியான சூழ்நிலையில் மனதை ஒருநிலைப்படுத்தி புத்தகத்தை படிப்பது மன அழுத்தத்தை குறைத்து அமைதியை மேம்படுத்தும். இவை ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.தூக்கமின்மை பிரச்சனையா?.... அப்போ இதை செய்யுங்க!

மேலும் பிடித்த பாடல்களை கேட்பதும் மன அமைதியை மேம்படுத்தும். இதனால் தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்யலாம்.

அதேசமயம் பகல் பொழுதில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் குடிக்கும் காபியின் அளவை குறைக்க வேண்டும். புகைப் பழக்கம், மது பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

இருப்பினும் தூக்கமின்மை பிரச்சனை தொடர்ந்து இருப்பின் அதனை சரி செய்ய மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்தது.

MUST READ