A – ஆப்பிள், B – பீட்ரூட், C – கேரட் ஆகியவைகளை ஒன்றாக மிக்சியில் அரைத்து அதை ஜூஸாக குடித்தால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும். இந்த ஜூஸ் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த ஜூஸை தினமும் அருந்தக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனென்றால் ஏபிசி ஜூஸில் இருக்கின்ற சர்க்கரை அளவு ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கும் என்பதாலும் இது நீரிழிவு நோயை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும் ஏபிசி ஜூஸை தினமும் அருந்தக்கூடாது என சொல்லப்படுகிறது.
ஏபிசி ஜூஸுக்கு பதிலாக ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகியவைகளை தனித்தனியாக எடுத்துக் கொள்வதால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். ஆப்பிளில் வைட்டமின் சி, நார்ச்சத்துகள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஆகியவை காணப்படுகின்றன. இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. அதேபோல் பீட்ரூட்டில் வைட்டமின் பி 12, தாதுக்கள், இரும்புச்சத்து போன்றவை காணப்படுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. அடுத்தது கேரட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி3, வைட்டமின் பி6, வைட்டமின் கே போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
எனவே ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகியவைகளை ஜூஸாக குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை விட அவைகளை தனித்தனியாக எடுத்துக் கொள்வதில் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதே சமயம் இதை தனித்தனியாக தினமும் எடுத்துக் கொள்வதால் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
- Advertisement -