தைராய்டு என்பது தைராய்டு ஹார்மோன் குறைவாக உற்பத்தியாகும் நிலை (ஹைபோ தைராய்டிசம்) அல்லது அதிகமாக உற்பத்தியாகும் நிலை (ஹைப்பர் தைராய்டிசம்) என இரு வகைப்படும். இந்த தைராய்டு பிரச்சனைக்கு கடல்பாசியை மிதமான அளவில் எடுத்துக் கொண்டால் நல்ல பயன் கிடைக்கும்.
பொதுவாக தைராய்டு ஹார்மோன்கள் உருவாக அயோடின் என்பது முக்கியம். அயோடின் குறைபாட்டால் ஏற்படும் ஹைப்போதைராய்டிசத்திற்கு கடல்பாசி உதவியாக இருக்கும். இது தைராய்டு சுரப்பிக்கு தேவையான ஹார்மோன்களை உருவாக்க உதவுவதோடு தைராய்டு செயல்பாடுகளை சீராகவும் வைத்திருக்கும்.
L- Tyrosine என்ற அமினோ அமிலம் தைராய்டு ஹார்மோன்கள் உருவாக பயன்படுகிறது. இது கடல்பாசியில் இயற்கையாகவே சிறிதளவில் இருக்கும் காரணத்தால் தைராய்டு பிரச்சனைக்கு இது தீர்வு தரும். அடுத்தது கடல்பாசியில் உள்ள ஜிங்க், செலனியம் போன்ற கனிமங்கள் தைராய்டு செயல்பாட்டை உறுதிப்படுத்த உதவுகிறது. ஆனால் இந்த கடல்பாசி என்பது ஹைப்போதைராய்டிசம் உள்ளவர்களுக்கு மட்டுமே நன்மை தரும். ஹைப்பர்தைராய்டுடிசம் உள்ளவர்கள் இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இருப்பினும் இதனை அனைவரும் மிதமான அளவில் எடுத்துக் கொள்வதே சிறந்தது. அதாவது கடல்பாசியை சமைத்து சாப்பிடலாம். ஆனால் நாள் ஒன்றுக்கு 1 முதல் 2 கிராம் வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படுத்தக் கூடாது.
மேலும் கடல்பாசியானது எலும்புகளை உறுதியாக்கவும், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரவும் பயன்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்ட பிறகு கடல்பாசியை எடுத்துக்கொள்வது நல்லது.