spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆண்களின் வயிறு பெரிதாவதற்கு உண்மையான காரணம் இதுதானா?

ஆண்களின் வயிறு பெரிதாவதற்கு உண்மையான காரணம் இதுதானா?

-

- Advertisement -

ஆண்களின் உடல், குறிப்பாக வயிற்றுப் பகுதி கொழுப்பை சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதி பெரிதாக இருக்கிறது. பெண்களில் கொழுப்பு, தொடைகள், இடுப்பு, வயிற்றின் பக்கவாட்டு பகுதிகளில் சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்களின் வயிறு பெரிதாவதற்கு உண்மையான காரணம் இதுதானா? பொதுவாக ஒரு மனிதனுக்கு உடல் உழைப்பு என்பது அவசியம். உடல் உழைப்பு இருந்தால் தான் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். உடற்பயிற்சி, நடை பயிற்சி எதுவும் செய்யாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையாமல் அது உடல் எடையை அதிகரிக்க காரணமாகி விடுகிறது. மேலும் அதிக கார்போஹைட்ரேட்டுகள், இனிப்பு வகைகள், மதுப்பழக்கம் போன்றவை உடலில் அதிகப்படியான கொழுப்புகள் சேர காரணமாக அமைகிறது. இது தவிர போதுமான தூக்கம் இல்லாமையும், மன அழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு அதிகரித்து தொப்பை ஏற்படுகிறது.ஆண்களின் வயிறு பெரிதாவதற்கு உண்மையான காரணம் இதுதானா?

பீர், விஸ்கி, வோட்கா போன்ற மதுபானங்களை அதிகமாக எடுத்துக் கொள்வதாலும் உடலானது அதிக கலோரிகளை சேமித்து கல்லீரலின் செயல்பாட்டை சேதப்படுத்தி, கொழுப்பை எரிக்கும் திறனை குறைக்கிறது. இதனால் மது அருந்துபவர்களுக்கு வயிறு இன்னும் பெரிதாக இருக்கும். அடுத்தது வயதாகும் போது வளர்ச்சிதை மாற்றம் குறைவதால் செரிமான பிரச்சனை ஏற்பட்டு உடலில் உள்ள கொழுப்புகள் விரைவில் கரையாமல் போய்விடுகிறது. இதனால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடல் எடை அதிகமாகும். தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதாவது கலோரிகளை குறைத்து நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆண்களின் வயிறு பெரிதாவதற்கு உண்மையான காரணம் இதுதானா?நாள் ஒன்றுக்கு குறைந்தது 40 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். காலை வெறும் வயிற்றில் 10 நிமிடங்கள் உடற்பயிற்சியும், மாலை நேரத்தில் நடை பயிற்சியும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். யோகா செய்யலாம். தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூக்கமின்மையால் மன அழுத்தம் அதிகரிக்கும். இதனால் கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகரித்து வயிறு பெரிதாகத் தொடங்கும். ஆதலால் இனி மன அழுத்தம் அதிகரிக்காமலும், உடல் எடை அதிகரிக்காமலும் பார்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இதனால் பல நோய்கள் ஏற்படும் அபாயமும் குறையும்.

we-r-hiring

இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ