Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்முகம் பளபளப்பாக தக்காளியுடன் இந்த ரெண்டு பொருளை கலந்தால் போதும்!

முகம் பளபளப்பாக தக்காளியுடன் இந்த ரெண்டு பொருளை கலந்தால் போதும்!

-

- Advertisement -

பெரும்பாலான பெண்கள் மார்க்கெட்டில் விற்கப்படும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள். இது உடனடியாக பலன் அளித்தாலும் எதிர்காலத்தில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. ஆகையால் இயற்கையான முறையில் முகத்தை அழகாக்கும் வழிகளை இங்கு பார்க்கலாம்.முகம் பளபளப்பாக தக்காளியுடன் இந்த ரெண்டு பொருளை கலந்தால் போதும்!

தக்காளியில் அழகை பாதுகாக்கும் ஆற்றல் இருக்கிறது. அதேபோல் மஞ்சள் என்பதும் கிருமி நாசினி. எனவே தக்காளி மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் தக்காளியை மிக்ஸியில் சேர்த்து அரைத்து பேஸ்ட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அந்த பேஸ்டில் சிறிதளவு மஞ்சள் தூளை போட்டு நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தேய்த்தும் மெதுவாக மசாஜ் செய்து பத்து நிமிடங்கள் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வர உங்கள் சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறுவதை காணலாம். குறிப்பாக இந்த கலவையை பயன்படுத்தி முகத்தை கழுவிய பின்னர் மாய்சுரைசர் பயன்படுத்துவது கூடுதல் சிறப்பு.முகம் பளபளப்பாக தக்காளியுடன் இந்த ரெண்டு பொருளை கலந்தால் போதும்!

அடுத்ததாக ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு சர்க்கரையை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் தக்காளியை இரண்டு துண்டுகளாக வட்டமாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது பாதி அளவு தக்காளியை எடுத்து சர்க்கரையை தொட்டு முகத்தில் மென்மையாக தடவ வேண்டும். (குறிப்பு: மென்மையாக மட்டுமே தடவ வேண்டும். கடுமையாக தடவினால் உன் முகத்தில் காயங்கள் ஏற்படக்கூடும்) அப்படி மென்மையாக தடவும் போது முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவடையும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு தடவை செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். இந்த முறையை முகம் மட்டுமல்லாமல் கை, கால்களிலும் பயன்படுத்தலாம்.முகம் பளபளப்பாக தக்காளியுடன் இந்த ரெண்டு பொருளை கலந்தால் போதும்!

மேலும் இந்த இரண்டு முறைகளும் எல்லா வகையான சருமத்தினருக்கும் பொருந்தும். இருப்பினும் இதனால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக தவிர்த்து விடுவது நல்லது. ஆகவே மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு இம்முறையை பின்பற்றி பாருங்கள்.

MUST READ