கிட்சன் டிப்ஸ்

-

- Advertisement -

கிட்சன் டிப்ஸ்

  • சப்பாத்தி மிருதுவாக இருப்பதற்கு கோதுமை மாவுடன் ஒரு வாழைப்பழம் மற்றும் ஒரு  கரண்டி தயிர் ,  சிறிது கொதிநீர் விட்டு பிசைந்து சுட்டால், சப்பாத்தி  மிருவாக இருப்பதுடன் சிறிது இனிப்பாகவும் இருக்கும்.
  • முற்றிய கோவைக்காயில் பொரியல் செய்யும் பொழுது, சிறிது வெல்லம் சேர்த்துச் செய்தால் மிகவும் நன்றாக இருப்பதுடன் சுவையும் கூடும்.
  • ஒரு தேக்கரண்டி புளித்த மோரை வெண்டைக்காய் வதக்குவதற்கு முன் சேர்த்தால், வெண்டைக்காய் மொறு மொறுவென்று இருக்கும்.
  • பருப்பு உருண்டை குழம்புக்கு உருண்டை பிடிக்கும் போது ஒரு டீஸ்பூன் அரிசி மாவை கலந்து உருட்டினால் உருண்டை கரையாமல் இருக்கும்.
  • ரவா கேசரி, ரவா பர்ஃபிக்கு தண்ணீரை பாதியாக குறைத்து, கெட்டியான பாலை சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
  • ரசத்தில் ஒரு ஸ்பூன் தேங்காய்ப்பாலினை சேர்த்தால் ருசி அருமையாக இருக்கும்.
  • கோதுமை ரவையை வறுத்து, வெல்லம் சேர்த்து, வேகவைத்து புட்டு செய்யலாம் டேஸ்ட் படு சூப்பராக இருக்கும்.
  • வடைக்கு மாவு அரைத்து எடுத்ததும், அதில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவைக் கலந்து வடை சுட்டினால் மொறுமொறுவென சூப்பராக வரும்.
  • பருப்பு தண்ணீரோடு, நெல்லிக்காயையும் சீவிப்போட்டு ரசம் செய்தால் அருமையாக இருக்கும்.
  • முருங்கைப்பூவை தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி, மோர்க்குழம்பில் போட்டு ஒரு கொதி வந்த பின் இறக்கிவிட்டால் அந்த நறுமணம் ஊரே வீசும்.
  • மீதமான கீரை மற்றும் முட்டைக்கோஸ் பொரியலில் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பக்கோடா செய்யலாம்.
  • புளித்த தோசை மாவில், சிறிதளவு சாதத்தை மிக்ஸியில் அரைத்து. மாவுடன் கரைத்துக் தோசை சுடலாம்.
  • ரவா தோசைக்கு மாவு கரைக்கும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கரைத்து தோசை வாா்த்தால் சிவந்து மொறுமொறுப்புடன் இருக்கும்.
  • பாகற்காய் கசப்பே தொியாமல் இருக்க உப்பு, வெல்லம், மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு கலந்து பிசைந்து அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு வறுத்தால் கசப்பே இருக்காது.
  • அரிசியை சமையலுக்கு உபயோகிக்கும் போது சிறிது கல் உப்பு சேர்த்துக் கலந்து கழுவினால் அரிசியில் உள்ள அழுக்கு நீங்கி விடும்.
  • கீரையை சமைக்கும் போது 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சமைத்தால் கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.
  • உப்புமாவின் சுவை அதிகரிக்க அவல், ரவா, சேமியா உப்புமா செய்யும் போது தண்ணீரின் அளவை குறைத்து ½ கப் தயிரைக் கடைந்து மோராக்கி அதில் கலந்து வேகவைத்தால் உப்புமாவின் சுவை அதிகரிக்கும்.
  • ஆப்பம் மாவினை ஊற்றி அதில் கொஞ்சம் கேரட் மற்றும் தேங்காய் துருவலையும் மேலே தூவி மூடி வைத்து வெந்ததும் சாப்பிட்டால் கலர்ஃபுல் ஆக இருப்பதுடன் சுவையும் அதிகரிக்கும்.
  • மிக்ஸி ஜாரில் மசாலாப் பொருட்களை பொடி செய்தவுடன், எவ்வளவு கழுவினாலும் மசாலா வாசனை போகாது. சிறிதளவு பிரெட்டை ஜாரில் போட்டு பொடி செய்தால் வாசனை அறவே போய் விடும்.

    https://www.apcnewstamil.com/news/chennai/on-the-occasion-of-world-idli-day-one-hundred-women-100-types-of-chutney-in-60-seconds/156641

MUST READ