spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கருப்பு உலர் திராட்சையின் முக்கிய பயன்கள்!

கருப்பு உலர் திராட்சையின் முக்கிய பயன்கள்!

-

- Advertisement -

கருப்பு உலர் திராட்சையில் பலவிதமான அற்புத குணங்கள் நிறைந்துள்ளன. இது மலச்சிக்கல் முதல் மாதவிடாய் கோளாறு வரை அனைத்தையும் சரி செய்ய உதவுகிறது. கருப்பு உலர் திராட்சையின் முக்கிய பயன்கள்!அதிலும் இரவு நேரத்தில் கருப்பு உலர் திராட்சையை ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டு வர நம் ரத்தத்தின் ஹீமோகுளோபின் லெவல் அதிகரிக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதை அப்படியே சாப்பிடுவதாலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது.

இந்த கருப்பு உலர் திராட்சையில் வைட்டமின் சி, இ போன்றவை அடங்கியுள்ளதால் இது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, குறைவான கலோரி போன்றவை உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் கருப்பு உலர் திராட்சை ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள அதிக அளவிலான பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். கருப்பு உலர் திராட்சையில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நம் நினைவாற்றலை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது. கருப்பு உலர் திராட்சையின் முக்கிய பயன்கள்!எனவே கருப்பு உலர் திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வர முதுமை காலத்தில் நினைவாற்றல் குறைவதை தடுக்கலாம். குறிப்பாக இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் செல்களை சேதமடையாமல் பாதுகாத்து புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

we-r-hiring

இருப்பினும் கருப்பு உலர் திராட்சையினால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் அதை உடனடியாக தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு சாப்பிடலாம்.

MUST READ