Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இந்த ரம்ஜானுக்கு அங்கூரி ரசகுல்லா செஞ்சு பாருங்க!

இந்த ரம்ஜானுக்கு அங்கூரி ரசகுல்லா செஞ்சு பாருங்க!

-

அங்கூரி ரசகுல்லா செய்ய தேவையான பொருட்கள்:

பால் – அரை லிட்டர்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
சர்க்கரை – ஒரு கப்
ரோஸ் வாட்டர் – ஒரு ஸ்பூன்
ஃபுட் கலர் ( ரோஸ்) – இரண்டு அல்லது மூன்று துளிகள்
ஸ்ட்ராபெரி எசன்ஸ் – ஒரு ஸ்பூன்இந்த ரம்ஜானுக்கு அங்கூரி ரசகுல்லா செஞ்சு பாருங்க!

செய்முறை

அங்கூரி ரசகுல்லா செய்ய முதலில் அடிகனமான பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் பால் சேர்த்து காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

பால் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து பால் திரியும் வரை கிளறி விட வேண்டும். அதன் பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு திரிந்த பாலை மெல்லியத் துணியில் ஊற்றி எலுமிச்சையின் வாசனை போகும் வரை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே துணியால் நன்கு சுற்றி தண்ணீர் முழுவதையும் வடியும் வரை பிழிந்து விட வேண்டும். இப்போது நமக்கு பனீர் கிடைக்கும்.இந்த ரம்ஜானுக்கு அங்கூரி ரசகுல்லா செஞ்சு பாருங்க!

இதை அகலமான தட்டு ஒன்றில் போட்டு மிருதுவாக பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த பின் இரு சம பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

அதில் ஒரு பாகத்தில் ரோஸ் ஃபுட் கலர் மற்றும் ஸ்ட்ராபெரி எசன்ஸ் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். மற்றொரு பாகத்தை அப்படியே வெள்ளையாக வைத்துவிடலாம்.

இப்போது வெள்ளை மற்றும் ரோஸ் நிற பன்னீரை சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக உருட்டி கொள்ள வேண்டும்.

அதேசமயம் மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் உருண்டையாக உருட்டி வைத்துள்ள பன்னீரை போட்டு 15 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். இடையிடையில் உருண்டைகள் உடைந்து விடாமல் கிளறி விட வேண்டும்.இந்த ரம்ஜானுக்கு அங்கூரி ரசகுல்லா செஞ்சு பாருங்க!

இவ்வேளையில் தனியே சர்க்கரை பாகு தயாரித்துக் கொள்ளவும். உருண்டைகள் வெந்த பிறகு அதனை ஆறவிட்டு சர்க்கரை பாகுடன் சேர்த்து பரிமாற வேண்டும்.

அருமையான அங்கூரி ரசகுல்லா தயார்.

MUST READ