தினமும் இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் சாப்பிட்டு போர் அடிக்குதா? ஒருமுறை இந்த புளிச்சக் கீரை பொடி செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
புளிச்சக்கீரை பொடி செய்ய தேவையான பொருட்கள்:
புளிச்சக்கீரை – 200 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
மிளகு – 15 கிராம்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
பூண்டு – 8 பல்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
புளிச்சக்கீரை பொடி செய்ய முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் உளுத்தம் பருப்பை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக புளிச்சக்கீரையை பொடியாக நறுக்கி அதையும் கடாயில் போட்டு வறுக்க வேண்டும்.
இப்போது வறுத்து வைத்திருக்கும் கீரையையும் மிளகையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்து வைத்துள்ள உளுந்து, பெருங்காயத்தூள், உப்பு, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து லேசாக பொடி செய்து கீரையுடன் சேர்த்து கலக்க வேண்டும்.
இப்போது அருமையான புளிச்சக்கீரை இட்லி பொடி தயார். இந்த இட்லி பொடியை மட்டும் நீங்க செஞ்சு பாருங்க இனிமே சட்னி, சாம்பார் எதையுமே தேடவே மாட்டீங்க.அதுமட்டுமில்லாமல் இந்த பொடியை சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.
மேலும் இந்த புளிச்சக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரும்பு சத்து குறைபாடு நீங்கும்.