கருப்பு உப்பு சமைப்பதற்கு மட்டும் பயன்படுவது அல்ல. உடல் ஆரோக்கியத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் இனிப்பிற்கு பதிலாக வெல்லம் பயன்படுத்திக் கொள்ளலாம். மிளகாய் தூள் காரத்திற்கு பதிலாக மிளகுத்தூள் காரம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் உப்பிற்கு பதிலாக வேறு எதையும் பயன்படுத்த முடியாது. ஏனெனில் உவர்ப்பு சுவை உப்பில் மட்டுமே இருக்கிறது.

இந்த உப்பானது கடல் நீரில் இருந்து கிடைக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் இந்த உப்பு பாறைகளின் மூலமும் கிடைக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். இமயமலை, நேபாளம் போன்ற மலைப்பகுதிகளில் இருந்து உப்பு எடுக்கப்படுகிறது. அந்த உப்பிற்கு தான் கருப்பு உப்பு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த வகையான உப்பில் சோடியம் குறைவாக காணப்படுகிறது. இந்த உப்பு, முட்டை மணம் இருப்பதால் சைவ விரும்பிகள் இந்த உப்பை சாப்பிட மறுக்கிறார்கள். ஆனால் இவை உடலுக்குச் சிறந்தவை என்பதை பலரும் மறந்து விடுகின்றனர். தற்போது இந்த கருப்பு உப்பின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
குளிக்கும் தண்ணீரில் கருப்பு உப்பினை சேர்த்து குளித்தால் சருமத்தில் வறட்சி ஏற்படாமல் வளபளப்பாக இருக்கும்.
அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதில் சிறிதளவு கருப்பு உப்பினை சேர்க்க வேண்டும். அந்த நீரில் நம் பாதங்கள் மூழ்கும் அளவிற்கு கால்களை 15 நிமிடங்கள் வைத்து, கழுவி வர பாதங்களில் உள்ள வெடிப்புகள் மறையும்.
தக்காளியை பிழிந்து ஜூஸ் எடுத்து அதில் கருப்பு உப்பு கலந்து குடித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவிதமும் ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.


