இலந்தை பழங்கள் இன்றும் பல கிராமங்களில் கிடைக்கின்றன. இலந்தை பழமானது 4000 ஆண்டுகளுக்கு முந்தையது பழமாக இருந்தாலும் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கின்றன. தமிழகத்தின் வறட்சி பகுதிகளிலும் கூட தானாக வளரக்கூடியது இந்த இலந்தைபழம். குளிர் காலங்களில் இவை பூத்து, காய்த்து கனியாகும். இந்த இலந்தை பழத்தில் உள்ள மருத்துவ குணங்களையும் அதில் உள்ள சத்துக்களையும் பற்றி அறிவோம்.
இந்த இலந்தை பழம் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைக்கக்கூடிய தன்மை உடையது.

இலந்தை பழம் போல் அதன் இலைகளும் மருத்துவ குணங்கள் கொண்டிருப்பதால் அந்த இலைகளை மையாக அரைத்து காயம் ஏற்பட்ட இடங்களில் தடவினால் விரைவில் குணமடையும்.
இலந்தைப் பழம் ஆனது பசியை தூண்டவும் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
இருதய நோய், முதுகு வலி, ஆஸ்துமா, சளி, தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு இந்த இலந்தை பழம் தீர்வாக இருக்கிறது.
குழந்தை பழம் அதிகம் விளையும் காலங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்துக்கள் அதிகரித்து எலும்புகள் பலமடையும்.
இலந்தை பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதனால் பித்தத்தை குறைக்கலாம்.
பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி மயக்கம் ஏற்படுவதுண்டு. அவற்றை தடுக்க இலந்தை பழங்களை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
செரிமான கோளாறுகளை சரி செய்ய இலந்தை பழத்தை விதை நீக்கி சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை காலை மற்றும் மாலை என இரு வேலைகள் இரண்டு கிராம் அளவில் எடுத்துக் கொண்டால் செரிமான கோளாறுகளை சரி செய்து பசியை தூண்டும்.
இம்முறைகளை ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.