வெயிலினால் நம் முகம் கருமை அடைந்து அத்துடன் சில சரும பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அதனை தடுக்க கடலை மாவை பயன்படுத்தலாம். நம் முகஅழகை பேணி பாதுகாப்பதில் கடலைமாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. கடலை மாவினை தினமும் பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம். தற்போது வெயிலால் கருத்த முகத்தை வெளுப்பாக்க அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
1. கடலை மாவுடன் சிறிதளவு வெள்ளரி சாறு எடுத்து நன்கு கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர வேண்டும்.

2. கடலை மாவுடன் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் கழுவி வந்தால் முகத்தின் கருமை மறைந்து வெளுப்பாகும்.
3. இரவு தூங்குவதற்கு முன் கடலை மாவுடன் சிறிது நீர் கலந்து முகத்தில் பூச வேண்டும் . பின் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும், சுருக்கங்களும் மறையும். மேலும் வெயிலினால் கருத்த நிறமும் வெளுப்பாகும்.
4. குளிக்கும் சமயத்தில் சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
5. கடலை மாவுடன் பாதாம் பவுடர், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் காய வைத்து குளிர்ந்த நீரில் கழுவி வர முகம் பிரகாசமாக இருக்கும்.
இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தினமும் இதை பயன்படுத்தலாம்.