Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பல நோய்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் இஞ்சி!

பல நோய்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் இஞ்சி!

-

நாம் காலையில் குடிக்கும் டீ முதல் பிரியாணி வரை இஞ்சியை முக்கிய பொருளாக பயன்படுத்தி வருகிறோம். பல நோய்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் இஞ்சி!இந்த இஞ்சி ஏராளமான அற்புத குணங்கள் கொண்டது. அதன்படி இவை வைட்டமின் ஏ, பி6, பி12, வைட்டமின் சி, சோடியம், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவைகளைக் கொண்டிருக்கின்றன. இஞ்சியானது குமட்டல், வாந்தி போன்றவற்றை தடுக்கவும் நம் உடம்பில் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் பயன்படுகிறது. பல நோய்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் இஞ்சி!இஞ்சியில் துவையல் செய்து சாப்பிட்டு வர செரிமான பிரச்சனை, பித்தம், வாய் துர்நாற்றம், வயிறு உப்புசம் போன்றவை குணமடையும். மேலும் இது தலை சுற்று, மலச்சிக்கல் போன்றவற்றிற்கும் தீர்வாக பயன்படுகிறது.

இஞ்சி, சளி மற்றும் இருமலை தடுக்க பயன்படுவது மட்டுமல்லாமல் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.பல நோய்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் இஞ்சி!

இஞ்சி சாறுடன் பால் சாப்பிட வயிற்று வலி தீரும். அதேசமயம் காலை வெறும் வயிற்றில் இஞ்சி உடன் தேன் கலந்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர தொப்பை குறையும். இஞ்சியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

மேலும் இஞ்சியை தொடர்ந்து சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இஞ்சியை உட்கொள்வதனால் மன அழுத்தம் குறைவதோடு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியம் மேம்படும்.

இருப்பினும் இஞ்சியினால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்ட உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ