துத்தி மூலிகை இயல்பிலேயே இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி மூலிகை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இதை நம் தோளில் பட்டால் அரிப்பு ஏற்படும். இவை கடற்கரை ஓரங்கள் சமவெளிகளில் படர்ந்து காணப்படும். தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் வளர்கிறது. இந்த துத்தி மூலிகையில் இருக்கும் இலைகளுடன் பருப்பு சேர்த்து உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
துத்தி இலையானது அலர்ஜி, ஆசன வாய் எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும். வெள்ளைப்படுதல், கரும்புள்ளி போன்றவற்றை குணப்படுத்தும்.

ஆண்மையை பெருக்க உதவுகிறது மேலும் ரத்தப்போக்கை குறைக்கவும் பயன்படுகிறது.
துத்தி மூலிகைகள் இருக்கும் இலை, விதை, வேர்,பட்டை, பூ ஆகியவை அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.
வெள்ளைப்படுதல் குணமாக துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர விரைவில் குணமாகும். துத்தி இலைகளை பொரியலாக செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
துத்திப் பூக்களை உலர்த்தி பொடியாக்கி வைத்து ஒரு தேக்கரண்டி அளவு பொடியை ஒரு டம்ளர் பாலில் கலந்து இரவு நேரங்களில் குடித்து வர உடல் சூடு தணியும்.
உடல் வலி இருக்கும் இடங்களில் துத்தி இலைகளை கொதி நீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை தொட்டு குழிந்து வலியுள்ள இடங்களில் தேய்த்து வர உடல் வலி குணமடையும்.
இந்த முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.