விளாம்பழத்தினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். விளாம்பழம் உடலுக்கு வலிமை அளிக்கிறது. நன்கு பழுத்த விளாம்பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.குழந்தைகளுக்கு இந்த விளாம்பழத்தை அடிக்கடி கொடுத்து வரலாம். விளாம்பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன அவற்றை நாம் எப்போது பார்க்கலாம்.
விளாம்பழத்தில் வைட்டமின் சி, பால்மிடிக், சிட்ரிக் அமிலங்கள், புரதச்சத்துக்கள், இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து, வைட்டமின் ஏ போன்றவை அடங்கியுள்ளன. விளாம்பழம் பல்வேறு வியாதிகளை குணப்படுத்த பயன்படுகிறது.

- எலும்புகளை பலப்படுத்தவும், ஞாபக சக்தியை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது.
2. இது ஜீரணக் கோளாறுகளை சரி செய்யவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பயன்படுகிறது.
3. சீதபேதி குணமடைய விளாம்பழம் உதவுகிறது.
4. விளாம்பழம் இதயத்திற்கு பலமளிக்கிறது.
5. பித்தத்தினால் ஏற்படும் தலைவலி, கண் பார்வை மங்கல், வாந்தி போன்றவற்றை குணப்படுத்த விளாம்பழம் உதவுகிறது.
6. விளாம்பழம், முகம் இளமையாக இருப்பதற்கு உதவுகிறது. முகத்தில் வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது. முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க பயன்படுகிறது.
7. அல்சர் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. வாயுத் தொல்லையை நீக்குகிறது.
8. பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளை குணமாக்குகிறது.
எனவே தினமும் ஒரு விளாம்பழம் சாப்பிடுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.