spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கொடுக்காய்ப்புளியின் மருத்துவ ரகசியங்கள்!

கொடுக்காய்ப்புளியின் மருத்துவ ரகசியங்கள்!

-

- Advertisement -

கொடுக்காய்ப்புளியின் மருத்துவ ரகசியங்கள் குறித்து பார்ப்போம்.கொடுக்காய்ப்புளியின் மருத்துவ ரகசியங்கள்!

கொடுக்காய்ப்புளியில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் சி, பி1, பி2, பி3, புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் என பல சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீர்படுத்தி செரிமானத்தை மேம்படுத்தும். இதனால் மலச்சக்கல் பிரச்சனை தீரும். மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் கொடுக்காய்ப்புளி உதவும்.

we-r-hiring

கொடுக்காய்ப்புளி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு தருகிறது. இது தவிர இது நீரழிவு நோயாளிகளுக்கும் நன்மை தருகிறது. ஏனென்றால் இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அடுத்தது இது கெட்ட கொழுப்புகளை கரைத்து இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.கொடுக்காய்ப்புளியின் மருத்துவ ரகசியங்கள்!

கொடுக்காய்ப்புளி வயிற்றில் அமலத்தை குறைத்து புண் ஏற்படாமல் தடுக்கும். இதில் இருக்கும் குர்செடின், கம்ஃபெரோல் போன்ற சத்துக்கள் வயிற்று ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

கொடுக்காய்ப்புளி தொடர்ந்து சாப்பிடுவதால் தோல் வயதாகுதல் தாமதமாக நடக்கும். இருப்பினும் இதை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால் வயிற்று வலி, தலைசுற்றல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இது தவிர கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கல்லீரல் நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதை சாப்பிடக்கூடாது.

MUST READ