மாப்பிள்ளை சம்பா அரிசியை ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டுமாம்.
இன்றுள்ள பிசியான காலகட்டத்தில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வது கிடையாது. வேலைக்கு செல்லும் அவசரத்தில் துரித உணவுகள் போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுகிறோம். இதனால் இதயம் சம்பந்தமான பிரச்சினை, நீரழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற பலவிதமான பிரச்சனைகள் உண்டாகிறது. குறிப்பாக போதுமான அளவு சத்துக்கள் கிடைக்காததால் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. எனவே அந்த ஆண்மை பிரச்சனைக்கு மாப்பிள்ளை சம்பா அரிசி நல்ல தீர்வாக இருக்கிறது.
மாப்பிள்ளை சம்பா அரிசி என்பது சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அரிசியில் நார்ச்சத்தை இரும்புச்சத்து, புரதம், துத்தநாகம் போன்ற பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. நார்ச்சத்து என்பது நம் உடலுக்கு தேவையான சத்துக்கள். ஏனென்றால் இது நம் உடலில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு உதவுகிறது. அதாவது மலச்சிக்கலை போக்க இந்த நார்ச்சத்து மிகவும் அவசியம். அதேபோல் இரும்புச்சத்து இருந்தால்தான் நம்மால் பலமாக இருக்க முடியும். அத்தகைய பலம் கொடுக்கும் சத்துக்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் உள்ளது.
இந்த அரிசியை தினமும் சாப்பிட்டு வருவதனால் ஆண்மை பலப்படும். எனவே ஆண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அரிசி தான் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி. எனவே இளம் வயது ஆண்களும் மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது. கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை தினமும் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை எடுத்துக் கொண்டால் விரைவில் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
அடுத்தது நீரழிவு நோயாளிகள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆகையினால் வெள்ளை அரிசி வகைகளை தவிர்த்து விட்டு இது போன்ற மாப்பிள்ளை சம்பா அரிசி வகைகளை சாப்பிட்டால் நீரழிவு நோயை கட்டுப்படுத்தலாம். இது நரம்புகளுக்கும் வலு கொடுக்கும். அத்துடன் ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்கலாம். அதே சமயம் இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளையும் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.